UNDHAN SUYAMADHIYE – உந்தன் சுயமதியே

உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு

துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/650693248466223

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks