போற்றிப் பாடுவேன் உம்மை
மகிமை நிறைந்தவர் நீரே
உயர்த்தி பாடுவேன் உம்மை
எங்கள் இராஜாதி இராஜனே
எங்கள் தேவாதி தேவனே
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2
1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2
உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்
மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2
2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2
உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
எங்கள் யெகோவா தேவனே
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2
3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2
என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்
உம் சேவை செய்திடுவோம்-என்றும்
உம்மண்டை சேர்ந்திடுவோம்
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை-2
Song : Potri Paaduven Ummai Album : Single Composed & Lyrics :Bro.Jonathan Udhay Sung by : Bro.Jonathan Udhay Featuring: Bro.Charles & Bro.M. Samuel Music : Ganeeshgan GV