பூலோகத்தாரே யாவரும் – Poolokaththaarae Yaavarum
1.பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களி கூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.
2.பராபரன் மெய்த் தெய்வமே;
நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;
நாம் ஜனம், அவர் ராஜனே;
நாம் மந்தை, அவர் மேய்ப்பனானார்
3. கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்;
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதி செய்யுங்கள்
4. கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே
5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்
1.Poolokaththaarae Yaavarum
Karthaavil Kazhi Koorungal
Ananththathodae sthothiram
Seluthi Paada Vaarungal
2.Paraaparan Mei Deivamae
Naam Alla Avar sirustithaar
Naam Janam Avar Raajanae
Naam Manthai Avar Meipanaar
3.Kempeeriththavar Vaasalai
kadanthu ullae sellungal
Sirantha Avar Naamaththai
Kondaadi Thuthi Seiyungal
4.Karthar Thayaalar Irakkam
Avarukku Entrum Ullathae
Avar Anaathi sathiyam
Maaramal entrum Nirkumae
5. Vin Mannil Aatchi seigira
thiriyeha Deivamaagiya
pitha kumaaran aavikkum
sathaa Sthuthi Undagavum