நித்திய வாசியும் பரிசுத்த நாமமும்
மகத்துவம் நிறைந்தவரை ஆராதிப்பேன்
உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும்
தங்கி இருப்பவரை ஆராதிப்பேன்
– ஆராதனை – 8
1. வானம் உமக்கு சிங்காசனம்
பூமி உமக்கு பாதப்படியாம்
உம்முடைய கரமே உலகை கிருஷ்டித்தது
உம்மையே பணிவேன் பரிசுத்தரே – ஆராதனை ….
2. சர்வ வல்லமை உடையவரே
சாகா வரத்தை கொண்டவரே
இருக்கிறவராக இருப்பவரே
யெகோவா தெய்வமே ஆராதிப்பேன் – ஆராதனை….
3. ஒளியை வஸ்திரமாய் தரித்துள்ளீர்
வானங்களை திரைப்போல விரித்துள்ளீர்
மகிமையும் மகத்துவமும் அணிந்துக் கொண்டீர்
மாறாத தெய்வம் உம்மை ஆராதிப்பேன் – ஆராதனை….