நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan

நான் ஜெயிக்க பிறந்தவன் ஆளப்பிறந்தவன்
ஆசீர்வாத வாய்க்கால்தான்
என்னைக்கொண்டு தேவன் பெரிய காரியம் செய்திடுவார்

1. கிறிஸ்துவோடு ஆளுகை செய்ய
அழைக்கப்பட்ட மனிதன் நான்
தேசத்தை ஆள்வேன் சமாதான கொடியை
உலகமெங்கும் வீசச்செய்வேன்

(நான் ஜெயிக்க…)

2. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
ஆசீர்வதிக்கப்பட்டவன் நான்
உலகத்தை ஜெயிப்பேன் சாத்தானை மிதிப்பேன்
கர்த்தரின் சொத்துக்கு பங்காளி நான்                      (நான் ஜெயிக்க…)

3. எனக்கு எதிராய் பதினாயிரம் பேர்
பாளயமிறங்கி வந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்பட மாட்டேன்
இயேசுவின் நாமத்தில் ஜெயித்திடுவேன்

(நான் ஜெயிக்க…)

4. கர்த்தரின் வேதத்தில் எப்போதுமே
தியானமாக இருப்பதனால்
இலட்சம்பேருக்கு என்னை அவர்
ஆசீர்வாதமாய் மாற்றிடுவார்

(நான் ஜெயிக்க…)

நான் ஜெயிக்க பிறந்தவன் – Naan Jeykka Piranthavan

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks