ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா
ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே – தேவா
1. கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா
தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா
உந்தனின் சேவை செய்ய – தேவா (2)
2. எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா
சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா
இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை இரட்சிக்கவே – தேவா (2)
3. உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா
வரங்களை அளித்தீர் ஸ்தோத்திரம் தேவா
உமக்கென்று வாழ்ந்திடவே – தேவா (2)
4. எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா
தூதர்கள் சூழ ஸ்தோத்திரம் தேவா
மறுபடியும் வருவீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் கொண்டு செல்ல என்னை – தேவா (2)
12 ஆகையால் இஸ்ரவேலே, இந்தப் பிரகாரமாக உனக்குச் செய்வேன். இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிற படியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
13 அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின் மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார். சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
[ஆமோஸ் 4:13]✝️