தேவ கிருபை என்றுமுள்ளதே – Deva Kirubai Entrum Ullathe Song Lyrics

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2

1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ கிருபை )

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன் – 2
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் – 2
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே – 2 – (தேவ கிருபை )

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே – 2
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே – 2
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

✝️✝️ ஒரு நிமிடம் தியானம் ✝️✝️

நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

2 தீமோத்தேயு 4:5

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது, ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டுதான் தன் வாழ்க்கையை துவக்குகிறது.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.

மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது

இது போலத்தான் ஊழியத்தின் நிமித்தம் பல தீங்குகள் நமக்கு இந்த உலகத்தில் உண்டு இவை அனைத்தும் நம்மை ஊழியத்தில் ஆண்டவர் பக்குவப்படுத்துகிறார், இந்த உலக ஜனங்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் என்றால் பல தீங்கின் நிமித்தம் அனேக காரியங்களை கற்றுக்கொண்டு ஆண்டவருக்கு ஊழியம் செய்வோம், அல்லேலூயா, ஆமென்.

கர்த்தருடைய ஊழியத்தில் W. மேஷாக்.

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks