துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் – Thunbam Vanthalum Nastam Nearnthalum

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்
கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2)

இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே

என்னை பெற்றோர் கைவிட்டாலும்
நான் நம்பினோர் மறந்தாலும்
இருள் என்னை சூழ்ந்தாலும்
நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என்னை பெயர் சொல்லி என்னை அழைத்த இயேசு என்னை ஒருபோதும் கைவிடார் (2)

இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே

நெருக்கத்தில் வாழ்ந்தாலும்
நான் இயேசுவை நம்பிடுவேன்
இக்கட்டில் இருந்தாலும்
என்னை இயேசு விடுவிப்பார்
என்னை கரம் பிடித்து இயேசு நடத்தி செல்வார் நான் விழுவதே இல்லையே (2)

இயேசு இயேசு எனக்காகவே மரித்தாரே
இயேசு இயேசு எனக்காகவே உயிர்த்தாரே

துன்பம் வந்தாலும் நஷ்டம் நேர்ந்தாலும் ஒரு நாளும் பயப்படேன் நான்
கர்த்தருக்குள் நான் என்றும் மகிழ்ந்திருப்பேன் அவர் கிருபை தாங்குமே (2)

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks