திகையாதே என்றீர் கலங்காதே என்றீர்

திகையாதே என்றீர்

கலங்காதே என்றீர்

உன் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார்

சோா்வுராதே என்றீர்

பயப்படாதே என்றீர்

உன் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார் – 2

நான் உன்னை விட்டு விலகுவதில்லை

உன்னை என்றும் கைவிடுவதில்லை

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்

ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை – திகையாதே

 

பரிசுத்தத்தோடு நாம் ஆராதிக்கும் போது

கர்த்தர் நம் நடுவே அற்புதங்கள் செய்வார்

முழு இதயத்தோடு நான் துதித்திடும்போது

ஜெயத்தை கர்த்தர் இன்றே தருவார் – 2  நான் உன்னை…

 

2.கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படியும் போது

அவரே காரியங்கள் செய்திடுவார்

கர்த்தரின் தாசர்கள் மாறிடும் போது

எதிரிக்கு முன்பாக மேன்மை படுத்திடுவார் – 2 நான் உன்னை…

 

3.நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்

திகையாதே கலங்காதே என்றவரே

நீ நிற்கும் பூமியின் எல்லையை விரிவாய்

ஆணையிட்டு கொடுப்பேனே என்றவரே – 2 நான் உன்னை…

Contact : 9444609229 David B Kens Tamil Worship Songs

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks