தாமதமாய் வந்து நிற்கிறேன்
இயேசுவே உம் பாதத்தில்
இருதயத்தை ஊற்றுகிறேன்
இயேசுவே உம் சமூகத்தில் – 2
இரங்கும் தேவா மனமிரங்கும் – 4
உம் அன்புக்கு இணையே இல்ல…
கிருபைக்கு எல்லையே இல்ல… – 2
1.வாழ்ந்த நாட்கள் வீணாய் சென்றதே…
வாழும் நாட்கள் உம்மோடு வாழ வேண்டுமே – 2
பாய்மரக்கப்பல் போல் நான் அலைகின்றேனே
கரைசேர ஒளியாய் நீா் வரவேண்டுமே – 2
உம் அன்புக்கு இணையே இல்ல.. கிருபைக்கு எல்லையே இல்ல… – 2
2.சத்தம் கேட்டு ஊழியம் செய்யனும்
நித்தம் உந்தன் பாதையில் நான் நடக்கணும் – 2
வார்த்தை சொல்லும் வாழ்க்கையே என் ஜீவனாகனும்
உம் சித்தம் செய்யும் தாசனாய் நான் மாறனும் – 2
அன்புக்கு இணையே இல்ல.. உம் கிருபைக்கு எல்லையே இல்ல… – 2 – தாமதமாய்
For Contact:+91 9444609229