சேனையில் பாலரே – Seanaiyil Paalarae searnthu
சரணங்கள்
1. சேனையில் பாலரே சேர்ந்து ஒன்றாகவே
தேவனைத் தொழுது கை தட்டுங்கள் மிகக் கொட்டுங்கள்
2. பெத்லகேம் பாலனைப் புகழ் மனுவேலனை
புண்ணிய சீலனைப் போற்றுவோம் மகிழ் ஏற்றுவோம்
3. பாவிகள் நேசனைப் பாவ விமோசனை
பாவலர் வாசனைப் பண்புடன் துதி பாடுவோம்
4. ஆவின் குடி லவதரித்த அற்புதனை
தேவ குமாரனைத் தீயரின் பிணையாளனை
5. எம்பிரான் தம்பிரான் எம் குலத் தண்ணலாம்
இம்மானு வேலனாம் எல்லாரும் களிகூருவோம்
6. எங்கள் கிறிஸ்துவுக் கிங்கிதமாகவே
மங்கள சோபனம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
1.Seanaiyil Paalarae searnthu
Devanai Thozhthu Kai Thattungal Miga Kottungal
2.Bethlaheam Paalanai Pugal Manuvealanai
Punniya Seelanai Pottruvom Magil Yeattruvom
3.Paavigal Neasanai Paava Vimosanai
Paavalar Kumaaranai Theeyarin Pinaiyaalanai
4.Aavin Kudi Lavathariththa Arputhanai
Deva Kumaaranai Theeyarin Pinaiyaalanai
5.Empiraan Thampiraan Em Kula Thannalaam
Immaanu Vealanaam Ellaarum Kalikooruvom
6.Engal kirsithuvuk Kingithamaagavae
Mangala Sobanam Magilnthu Kondaaduvom