சிலுவையில் நின்றெழுந்த அன்பின் – Siluvaiyil Nintreluntha anbin

சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் – நம்மை
சீராக்கி நேராக்கும் மன்னன் குரல்

சரணங்கள்

1. மன்னிப்பின் குரலினையே முதலெழுப்பி
மாந்தர் தம் பாவத்தை போக்கிவிட்டார்
மீட்பின் குரலினையே பிறகெழுப்பி
மாபெரும் கள்வனுக்கு வாழ்வளித்தார் (2)

2. பார்த்தின் குரல் தன்னை பார்த்திபனும்
பார்போற்றும் மரியாளுக்கும் வழங்கி நின்றான்
உயிரூட்டும் தந்தையின் கரம் பிடித்து
உறுதியின் குரலினையே எழுப்பி நின்றார் (2)

3. நல் நீரை நான் தருவேன் என்றவரோ
நாவறள தாகத்தின் குரலெழுப்பி
முடிந்தது முடிந்தது எனக்கூறி
முழுமையின் குரலினையே முழக்கி நின்றார் (2)

4. தந்தையின் கரங்களில் தனதுயிரை
தருகிறேன் எனவெற்றிக் குரலெழுப்பி
தலை சாய்ந்து உயிர் நீத்த இயேசுபிரான்
தலைவனாய் உயிர்த்தெழுந்து ஆளுகிறார் (2)

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks