Song lyrics
சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே
எனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2
எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்
எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா
1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே
உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2
என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா
காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2
2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்
கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2
சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்
எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2
3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவே
இந்த ஏழை மக்கள் வாழ்க்கை நிலை உயரவே-2
ஏழைகளின் அதிபதியே சீக்கிரம் வாருமையா
உமது வார்த்தையாலே சமாதானம் தாருமையா -2
4.என் குடும்பம் சபையில் சமாதானம் வேண்டுமே
என் ஊழியத்தில் சமாதானம் வேண்டுமே-2
சமாதான காரணரே ஏசுவே நீங்கதாப்பா
சந்தோஷம் தருபவரும் ஏசுவே நீங்கதாப்பா. -2
5. சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே
எனக்கும் சமாதானம் தந்து விட்டீர் தகப்பனே
சபையில் சமாதானம் குடும்பத்தில் சமாதானம்
ஊழியத்தில் சமாதானம் உறவிலே சமாதானம்