காலத்தின் அருமையை உணர்ந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
அனுபல்லவி
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
சரணங்கள்
1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ?
2. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ,
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்?
3. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? – காலத்தின்