காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு-2
மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்
வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு
1.காற்றைத்தென்றலாக்கி என் பாட்டை பாட வைத்தார்
மூச்சுடன் காற்றை சேர்த்து முடிச்சொன்று போட்டார்-2
ஆற்று நீரை அள்ளி கொடுத்தார்
கழிவு நீரால் மனிதன் கெடுத்தான்-2
வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்-2
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு
2.ஆவியான தேவன் அசைவாடி வந்த உலகம்
இயேசு சிந்திய இரத்தம் சுத்தமாகும் வையம்-2
வார்த்தையாகி வாழ்வை தந்தார்
மனிதன் வாழ்வில் புதுமை தந்தார்-2
வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுய நலத்தாலே எல்லாமே கெடுத்தான்-2
காடுகள் உயிர்களின் வீடு
மரங்களை அழிப்பது யாரு-2
மழைத்துளியாலே பசுமையை வரைந்தார்
இயற்கையின் வடிவில் இமைகளை திறந்தார்
வானம் பூமி யாவும் அழகாய் தேவன் படைத்தார்
வாழும் மனிதன் சுயநலமின்றி சுகமாய் வாழலாம்-2