ஒரு குஷ்டரோகியைப் போல

ஒரு குஷ்டரோகியைப் போல

உம் சமூகத்தில் வந்து நிற்கிறேன்

சித்தமா… என்று கேட்கிறேன்…

நீர் சித்தம் என்றீரே

 

1.தள்ளப்பட்டேன் ஒதுக்கப்பட்டேன்

வாழ்வில் பல நாளாய்

வெறுக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன்

வாழ்வில் முழு நாளாய்

என் இயேசு வந்ததும்… நான் ஓடி சென்றேனே…

நீர் என்னை பார்த்ததும்… என் வாழ்வே மாறினதே… – ஒரு குஷ்டரோகியை

 

2.நினைச்சி பாா்க்கல

வாழ்க்கையை மாற்றும்

இயேசு உண்டென்று

அவர் இரக்கமும் உருக்கமும்

நீடிய சாந்தமும் உள்ளவர் என்றென்றும்

அவர் கையை நீட்டினார்… என்னை தொட்டார்…

சுத்தமாகு என்றார்… நான் சுத்தமானேன்… – ஒரு குஷ்டரோகியை

Contact : 9444609229 David B Kens Tamil Worship Songs

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks