எத்தனை கோடி நன்மைகள்- Ethanei Kodi Nanmaigel

எத்தனை கோடி நன்மைகள்
எந்தன் வாழ்வில் நீர் செய்ததை
எப்படிச் சொல்லிப் பாடுவேன் – என் தேவா

உளையான பாவச் சேற்றில்
உழன்று கிடந்த என்னை
தூக்கிய விதம்தனை நினைத்தேன்
பாழான நிலத்தினிலும்
ஊளையிடும் குழிதனிலும்
கண்டுபிடித்தென்னை தெரிந்துகொண்டு
தாங்கி நடந்தின விதம்தனை
நினைத்து – எத்தனைக் கோடி

கனவீனமான என்னை
கனவானாய் மாற்றும்படி
கனமான சிலுவையை சுமந்தீர்
கலவாரி சிலுவையிலே இரத்தம்
சிந்தி எனை மீட்டு
நித்திய மகிமைக்கு முத்திரை தந்து
உத்தமரே உம் மகிமையை
நினைத்து – எத்தனைக் கோடி

ஒரு தந்தையைப் போல தோளின் மேலே
சுமந்து சென்றதைச் சொல்லவா
ஒரு தாயைப் போல மார்போடென்னை
அணைத்துக் கொண்டதைச் சொல்லவா – என்
கண்ணிரை மாற்றினதைச் சொல்லவா
கவலை மாற்றினதைச் சொல்லவா
எத்தனை நாவுகள் எனக்கிருந்தாலும்
அத்தனை நாவுகள் உமை
துதித்தாலும் போதாது என் தேவா
அப்பா உம் கிருபையை எண்ணிப்
பாடுவேன் என் நாதா – எத்தனை கோடி

சப்தஸ்வரங்கள் முழங்கட்டும்
மேள தாளங்கள் ஒலிக்கட்டும்
கீதவாத்தியங்கள் இசைக்கட்டும்
பரிசுத்தவான்கள் பாடட்டும்
பரலோக ராஜ்யம் திறக்கட்டும்
பரலோக ராஜ்யம் திறக்கட்டும் – எத்தனைக் கோடி

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks