உச்சித பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் -utchitha Pattanam patchamudan selluvom

உச்சித பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் -utchitha Pattanam patchamudan selluvom

பல்லவி
உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்;-
விரைந்தோடி நடவடி, உத்தம புத்திரி,-
உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்.

அனுபல்லவி
நிச்சயமாதவே ரட்சகர் செப்புரை
நீணிலம் தோன்றும் முனாடி,-நம்
நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
நீதியின் பட்டணம், ஆதிபன் கட்டடம்,
நிண்ணய மா நகரம்-திடத்திடு
உன்னதமே சிகரம்;-நமின் பிரிய
நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத் தவர்
நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற. – உச்சி

சரணங்கள்

1. சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே,
செப்புகிறாய் எனின் தாயே;-அதில்
சேர்ந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்,
திட்ட அரிதாம், என் தாயே;-புது
வித்தக மா நகர் ரத்னப் பளிங்கு
விளக்கொளி மேவும், நன்றாயே;-அந்த
விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்?
விளிம்பி விரி, என் பேராயே;
இத்தரை மீதிலோ அத்திரி வானிலோ?
இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ?
எங்கே இருக்கு தம்மா?-கவலை அற்
றங் கிருப்போமே, சும்மா,-சரி சரி,
இன்பக் கண்ணாட்டியே, அன்புப் புதல்வியே,
எங்கிருக்கு தென்றன் தங்கமே, சொல்கிறேன். – உச்சி

2. உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
ருசலேம் பட்டணம் கண்டு,-வெகு
ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு,
ஓசன்னாவும் பாடிக் கொண்டு,-அங்கே
பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
பானொளிக் கற்களும் உண்டு,-அந்தப்
பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
பண்பாக மத்தியில் கொண்டு,
மின்னும் விளக்குகள், தீவட்டிகள் இல்லை;
விண்ணில் சூரிய சந்திரரும் இல்லை;
மெய்ப்பொழு தானவரே-அதன் விளக்
கெப்பொழுதும் அவரே;-அலங்க்ருத
மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு. – உச்சி

நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

Having the same conflict which ye saw in me, and now hear to be in me.

பிலிப்பியர் : Philippians:1:30

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks