பல்லவி
இன்றைக்கே மனந்திரும்புவாய்
இல்லையானாலும் கெடுவாய்
அனுபல்லவி
பின்னைக்கென்று நீ பின்னிடுவது
பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை
சரணங்கள்
1. நீதி வெட்டக் கை ஓங்குதே
நீடிய சாந்தமோ தாங்குதே,
மா தயவோடு பிராண நாதர்
வருந்திப் பாவி உன்னை அழைக்கிறார் – இன்றைக்கே
2. நாளைப் பிழைப்பு சாத்தியம்
நரக பாடுன் சம்பாத்தியம்
ஆவியானவர் கூவியழைக்கும்
வேளையிதுவே தட்டாதே – இன்றைக்கே
3. அந்திய காலம் பார்க்கலாம்
அதுவரைத் தனம் சேர்க்கலாம்
பிந்திப் போகாதெனச் சிந்தை கொள்வது