ஆயிரமிருந்தாலும்
நீர் என் தந்தை
ஆயிரம் நடந்தாலும்
நான் உம் பிள்ளை
தவறுகள் செய்தாலும்
தன்டிப்பதில்லை
மன்னிப்பதிலே நீர்
தயங்குவதில்லை (2)
1. என்பாவத்துக்குக் தக்கதாய்
நீர் ஒருபோதும் செய்வதில்லை
என் குற்றத்திற்க்குத் தக்கதாய்
நீர் சரிக்கட்டுவதும் இல்லை
கிழக்குக்கும் மேற்குக்கும் தூரமாய்
பாவங்களை விலக்கினீர்
தந்தை பிள்ளைக்கு இரங்கும்போல்
அஞ்சு வோர்க்குஇரங்குகிறீர்
ஆயிரமிருந்தாலும்
நீர் என் தந்தை
ஆயிரம் நடந்தாலும்
நான் உம் பிள்ளை
தவறுகள் செய்தாலும்
தன்டிப்பதில்லை
மன்னிப்பதிலே நீர்
தயங்குவதில்லை(1)
2. என் அக்கிரமங்கள் மன்னித்து
என் நோய்களை குணமாக்கி
என் பிராணனை அழியாமல் விலக்கி
கிருபை இரக்கத்தை சூட்டி
நன்மையினால் திருப்தியாக்கி கழுகைப்போல வாழவைக்கிறீர்
ஒடுக்கப்படும் யாவருக்கும்
நீதி நியாயம் கர்த்தர் செய்கிறீர்
ஆயிரமிருந்தாலும்
நீர் என் தந்தை
ஆயிரம் நடந்தாலும்
நான் உம் பிள்ளை
தவறுகள் செய்தாலும்
தன்டிப்பதில்லை
மன்னிப்பதிலே (நீர்)
தயங்குவதில்லை (1)