அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்- Arpanithean Ennai அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் இயேசுவே என்னை உம் பாதத்தில் உன் சமூகம் வந்து காத்திருக்கிறேன் பாக்கியவான் என்று சொல்லும் மட்டும் என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா என்னாலே அல்ல உம்மாலே ஆகும் நான் அல்ல இனி கிறிஸ்துவே என்றென்றும் என்னில் வாழ்கிறார் 1. திராட்சை கொடியாக உம்மிலே நான் நிலைத்திருப்பேன்… வளர்ந்திடுவேன்… மிகுந்த கனிகளைக் கொடுத்திடுவேன் நீ எந்தன் சீஷன் என்று சொல்லும் மட்டும் - என் சித்தம் அல்ல 2. நம்புகிறேன் உம்மை என்றென்றுமாய் உந்தன் கிரியைகள் செயல்படும் மட்டும் இயேசுவின் நாமத்தால் கேட்கிறேனே பெரிய கிரியைகள் செய்திடுமே - என் சித்தம் அல்ல 3. உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே நீர் என்னை அறிந்து தெரிந்து கொண்டீா் குமாரனின் சாயலாய் முன் குறித்தீா் உமக்காக வாழ்வேன் இறுதிவரை - என் சித்தம் அல்ல