அத்தி மரம் போல எத்தனையோ பேர்கள்
புத்தியில்லாமல் வாழ்கிறார்
அர்த்தமும் இல்லாமல் கர்த்தரும் இல்லாமல்
அலங்கோல வாழ்க்கை வாழ்கிறார்
உன்னில் கனி ஒன்றும் இல்லையேல்
வெட்டி எறியப்படுவாய் நீயும்
வேரருகே கோடாரி உள்ளதே
உணர்வாய் இனிக்காலம் செல்லாதே – அத்தி மரம் போல
1. பார்வைக்கு பசுமையாய் இருந்தது அத்திமரம்
ஆசையோடு இயேசு கனிதேடினார் ஏமாற்றம்
இப்படித்தானே பற்பல மனிதர்
வாழும் வாழ்க்கை தான் பல வேஷமே– உன்னில் கனி ஒன்றும்
2. அநியாயம் செய்பவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்
அசுத்தமாய் வாழ்பவன் இன்னும் அசுத்தமாய் வாழட்டும்
நீதி செய்பவன் இன்னும் நீதி செய்யட்டும்
பரிசுத்தமுள்ளவன் – இன்னும் பரிசுத்தமாகட்டும்
அவரவர்க்கு அளிக்கும் பலன் வருகுது என்றார்– உன்னில் கனி ஒன்றும்
3. கனி இல்லாத மரத்தை பிதா வெட்டி எறியச் சொன்னாரே
கோடாரிகையிலேந்தி தேவ தூதன் நின்றானே
இந்த வருடமும் இருக்கட்டும்
நல்லகனி கொடுத்திடும் என்று இயேசு சொன்னாரே
இனி தாமதமும் செய்யாதே
இனி காலங்களும் செல்லாதே
தேவனின் கோபமும் இறங்குமே
அப்போ இரக்கமும் கிருபையும் இல்லையே– அத்தி மரம் போல