மகிமையடையும் இயேசு – Magimai Adaiyum Yesu

மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக வருக

1.உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

2.பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

3.சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

4.என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா

5. நோய்களையெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா

6.கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக

Leave a Comment

error: Download our App and copy the Lyrics ! Thanks