நேசரே என் நேசரே

Song Title: நேசரே என் நேசரே
Lyrics: Pastor. Kumaresan Pakkiri, CJCLife San Antonio Tamil Church
நேசரே என் நேசரே
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!
என் நேசமே என் பாசமே
என் அன்பரே என் இன்பரே!
உம் மார்பில் சாய்ந்திடுவேன்!
சாய்ந்திளைப்பாறிடுவேன்!

அன்னையே  என் தந்தையே
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!
உந்தன் அன்பின் ஆழம் என்ன
அகலம் ,நீளம் என்ன
உயரம் என்ன வென்று அறியேனே!
உம் அன்பில் திளைத்திடுவேன்!
உங்க அன்பில் திளைத்திடுவேன்!

துணையாளரே மணவாளரே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்
உள்ளங்கையில் என்னை வரைந்துவைத்து தினம் ரசிக்கும்
அன்பு என்ன புரியலையே
தாய் மறந்தாலும் நான் மறவேன் என்று சொல்லும்
அன்பு ஒன்றும் புரியலையே
உம் நாமம் உயர்த்திடுவேன் உங்க நாமம் உயர்த்திடுவேன்

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version