1. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
உன்னை ஆதரிப்பார், ஆதரிப்பார்
அவரின் மாறா அன்பை நம்பு
உன்னைப் பூரிப்பாக்குவார்
பல்லவி
சாய்ந்து இரு நீ நம்பிக்கையோடே
சாய்ந்து இரு நீ பாக்கியம் பெறுவாய்
சாய்ந்து இரு நீ பரத்தை நோக்கி
கிறிஸ்துவிலே சாய்ந்திரு
2. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
பாதை சீராக்குவார், சீராக்குவார்,
மெல்லிய அவர் சத்தம் கேளு
அவரைப் பின் செல்லு – சாய்ந்து
3. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
தள்ளு கவலைகள், கவலைகள்
உன் விசார மெலலாம் அவரண்டை
ஜெபத்திலே ஒப்புவி – சாய்ந்து
4. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நீ பிரகாசிப்பாய், பிரகாசிப்பாய்
உன் பாவ இருளெல்லாம் அகற்றி
உன்னைத் தீபமாக்குவார் – சாய்ந்து
5. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு
நித்திய இராஜ்யமதில், இராஜ்யமதில்
நீதியின் கிரீடமென்றும் அணிந்து
நிலை பெற்றிருப்பாய் – சாய்ந்து