கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி – Koda Kodi Sthothiram Paadi

பல்லவி

கோடாகோடி ஸ்தோத்திரம் பாடி
கிறிஸ்துவின் அன்பை ருசிப்போமே

அனுபல்லவி

சேற்றிலிருந்து தூக்கி எடுத்துத்
தேற்றி அணைத்துக் காத்துக்கொண்டாரே தேவசுதன்

சரணங்கள்

1. பாவியை மீட்கப் பரன் சித்தங்கொண்டார்
பரலோகம் துறந்து பாரினில் பிறந்தார்
பரமனிவ் வேழையைத் தேடிவந்தாரே
பாதம் பணிந்தேன் பதில் ஏதுமுண்டோ? – பூவுலகில்

2. தேவனின் சித்தம் செய்யும் படியாய்
தாசனின் கோலம் தாமெடுத் தணிந்து
தற்பரன் நொறுக்கச் சித்தங் கொண்டாலும்
தம்மைப் பலியாய் தத்தம் செய்தாரே – எந்தனுக்காய்

3. ஆடுகளுக்காய் உயிர்தனைக் கொடுத்து
கேடுவராது காக்கும் நம் மேய்ப்பர்
இன்று மென்மேலே வைத்த நேசத்தால்
என்றென்றும் நன்றி கூறித்துதிப்பேன் – இறையவனை

4. தாவீது கோத்திர சிங்கமாய் வந்தும்
சாந்தத்தால் என்னைக் கவர்ந்து கொண்டாரே
தாழ்மையான ஆட்டுக் குட்டியுடனே
தங்கியிருப்பேன் சீயோன் மலையில் – நித்தியமாய்

5. குயவனின் கையில் களி மண்ணைப்போல
குருவே நீர் என்னை உருவாக்குமையா
மாசற்ற மணவாட்டியாய் என்னைக்
காத்துக்கொள்ளும்படி கருணைகூர் ஐயா – ஏழையென்னை

7 உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன், முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

9 வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.

10 என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

[சங்கீதம் 119:10]

Follow us : http://Instagram.com/christianmedias

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version