ஆயிரம் நன்றி சொல்வேன் – உனக்கு
பாயிரம் பாடிடுவேன்
நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனே
பாரெல்லாம் போற்றிடுவேன் – உன்
நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்
யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2)
1 . பாவியாய் இருந்தேன் பாருலகில் நானே
கேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயே
வேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயே
மாலையாய் என் வாழ்வைச்
சூட்டுவேன் உமக்கே (3)
காலை மாலையில் கர்த்தர் யேசுவின்
காலடி அமர்ந்திடுவேன்
வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனை தணித்திடுவேன்
வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2)
2 .தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேனே
தெவிட்டா இன்பத்தில் நிலைக்க வைப்பாயே
தேவனே உன்னில் நான் மகிழ்ந்திடுவேனே
காலை மாலையில் கர்த்தர் யேசுவின்
காலடி அமர்ந்திடுவேன்
வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனை தணித்திடுவேன்
வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2)