Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை

Deal Score0
Deal Score0

Kaatharulum Thagappanae song lyrics – காத்தருளும் தகப்பனே என்னை

காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனே
காத்தருளும் தகப்பனே இன்னும் காத்தருளும் தகப்பனே
இந்நாள் வரையில் காத்தீரே ஐயா
கண்ணீர்களையும் துடைத்தீரே ஐயா
இன்னும் காத்தருளும் தகப்பனே
என்னை காத்தருளும் தகப்பனே

1.நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயா
பெலவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்
ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயா
நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்மைகள் அவ்வளவு செய்தீர் ஐயா
சுகவீனங்களில் சோர்ந்திடும் வேளையில்
ஆறுதல் சொல்லிட வந்தீர் ஐயா
வாழ்க்கையே முடிந்தது என்றிடும் வேளையிலும் – 2
தேற்றிட உம் கரம் தந்தீர் ஐயா – 2
காத்தருளும் தகப்பனே என்னை காத்தருளும் தகப்பனே

2.தவறிடும் வேளையில் மன்னிப்பின் ஆதரவில்
வாய்ப்புகள் அவ்வளவு தந்தீர் ஐயா
தஞ்சம் என்று நான் வந்திட்டபோது
மீண்டுமாய் உம்மிடம் சேர்த்தீர் ஐயா
மன்னியும் என்று நான் சொல்லிடும் முன்னமே – 2
மன்னிக்க ஓடோடி வந்தீர் ஐயா. – 2

காத்தருளும் தகப்பனே காத்தருளும் தகப்பனே
இந்நாள் வரையில் காத்தீரே ஐயா
கண்ணீர்களையும் துடைத்தீரே ஐயா
இன்னும் காத்தருளும் தகப்பனே
என்னை காத்தருளும் தகப்பனே
காத்தருளும் தகப்பனே
இன்னும் காத்தருளும் தகப்பனே

    Jeba
        Tamil Christians songs book
        Logo