Iraiatchikkai iruthi Moochuvarai song lyrics – இறையாட்சிக்காய் இறுதி மூச்சுவரை
Iraiatchikkai iruthi Moochuvarai song lyrics – இறையாட்சிக்காய் இறுதி மூச்சுவரை
இறையாட்சிக்காய் இறுதி மூச்சுவரை
உழைத்திட அழைத்தவரே
உன்னதரே உம் நிழலினிலே
அடைக்கலம் புகுந்திடுவேன்
வலப்புறம் வானமே விழுந்தாலும்
இடப்புறம் இன்னல் பல வந்தாலும் -2
உம்மையே என் கேடயமாய்
தாங்கி நடந்திடுவேன்
ஆயனே உம் கரம் பிடித்து
கன்மலை நோக்கி நடந்திடுவேன் -2
1.வலியில் துடித்த நொடிகள்
வல்லமையோடு வாழ்ந்த நாட்கள் -2
கண்ணீரோடு கடந்த இரவுகள்
கலக்கமின்றி நடந்த பாதைகள்
அனைத்திலும் ஆயனாய் நின்று
என்னை அறவழியில் நடத்துகின்றீர்
ஆயனே உம் கரம் பிடித்து
கன்மலை நோக்கி நடந்திடுவேன் -2
2.தூக்கி எறியப்பட்ட தருணங்கள்
துரத்தி வந்த அவமானங்கள் -2
எதுவும் என்னை வீழ்த்திடாமல்
எதிர்ப்புக்களால் தடுமாறாமல்
எதுவும் என்னை வீழ்த்திடாமல்
இழப்புக்களாலும் தடுமாறாமல்
இருகரம் ஏந்தியே என்னை
கல்லின்மேல் மோதாமல் தாங்கினாய்
ஆயனே உம் கரம் பிடித்து
கன்மலை நோக்கி நடந்திடுவேன் -2
Iraiatchikkai uzhaithida song lyrics