Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று
Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று
எனக்கு என்ன தேவையென்று நீர் அறிந்திருக்கின்றீர்
என் தேவைகள் எல்லாம் சந்திக்கிறீர்
நான் வேண்டிக்கொள்ளும் முன்னமே
அனைத்தையும் நன்றாய் அறிந்தவரே
தேடுவேன் முதலாவது உம்மையே
உம் ராஜ்யமும் நீதியையும் தேடுவேன்
இவைகளெல்லாம் கூடதருகின்றீர்- எனவே
கவலைமறந்து உம்மை பின்பற்றுவேன்.
- காட்டுப் புல்லையும் பூவையும் உடுத்து விப்பவரே
ஆகாயத்துப் பட்சிகளையும் போஷிக்கிறீர்
எதை உண்போம் உடுப்போம் என்று கவலைப்படேன்
என் பரமபிதா என்னோடென்றும் இருக்கிறீர்
என்னை மறவா என் நல்ல தேவனே
ஒருபோதும் நீர் கைவிட மாட்டீர் - கொஞ்சம் மாவும் கொஞ்சம் எண்ணெய்யும் போதுமே
பஞ்சக்காலம் முடியும் வரைக்கும் நடத்துவீர்
சாவை மாற்றி வாழ்வை எனக்கு தந்தவரே
உந்தன் உண்மையும் அன்பும்
என்றும் மாறாததே
குறைவையெல்லாம் நிறைவாய் மாற்றினீர்
என்னைத் தேடி வந்து
அற்புதம் செய்தவரே.