1. அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
Avar Asthipaaram Parisuththa Parvathangalil Irukirathu.
2. கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
Karthar Yakobin VaasasThalangal Ella vattrai Parkkilum seeyonin Vaasalkalil Piriyamayirukiraar.
3. தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)
Devanudaya Nagaramae! Unnai kurithu Magimaiyana Visheshangal Vasanikkapadum.(selah)
4. என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலுங் கூட, இன்னான் அங்கே பிறந்தானென்றும்;
Ennai Arinthavarkalukullae Rahabaiyum Babilonaiyum kurithu peasuvaen; Ithu Belisthiyarilum Theeriyarilum Eththiyoppiyarlum kooda, Innaan Angae piranthan entrum;
5. சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
Seeyonai kurithu Innaal Innaan athilae piranthan entrum sollappadum; Unnathamaanavar Thaamae Athai Sthirapaduthuvaar.
6. கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)
Karthar Janangalai Paer Ezhuthumpothu, Innaan athilae piranthan entru avarkalai thogaiyiduvaar.(selah)
7. எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.
Engal oottrukal Ellam unnil irukirathu entru paaduvaarum aaduvaarum yeagamaai Solluvaarkal.