Psalms-3/சங்கீதம்-3

1.கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

Karthavae, En Sathrukkal Evvalavaai Perugi Irukiraarkal! Enakku Virothamaai Ezhumbikaravarkal Aneakar.

2.தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)

Devanidaththil Avanukku Ratchippu Illai Entru, En Aathumaavai Kuriththu Sollukiravarkal Aneakaraa-Irukiraarkal (Selah)

3.ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

Aanalum Karthavae, Neer En Keadagamum En Magimaiyum, En Thalaiyai UyarthukiraVarumaaiyirukireer.

4.நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

Naan Kartharai Nokki Saththamittu Kooppitean; Avar Thamathu Parisuththa Parvathathilirunthu Enakku Sevikoduthaar. (Selah)

5.நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.

Naan Paduththu Niththirai Seithean; Vizhiththu Kondean; Karththar Ennai Thaangukiraar.

6.எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

Enakku Virothamaai Suttrilum PadaiYeduththu Varukira Pathinaayiram Paerukkum Naan Bayapadaen.

7.கர்த்தாவே எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

Karthavae Ezhuntharulum; En Devanae, Ennai Ratchiyum. Neer En Pagaingar Ellaraiyum Thaadaiyilae Adiththu, Thunmaarkarudaya Parkalai Thakarththu-Potteer.

8.இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)

Ratchippu Kartharudayathu; Devareerudaya Aaseervaatham Ummudaya Janaththin Mael Iruppathaaga. (Selah)