1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
Aathiyilae Devan Vaanaththaiyum Bhoomiyaiyum Sirushstiththaar
2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
Bhoomiyanathu Ozhunkinmaiyum Verumaiyumaai Irunthathu; Aazhaththin Mael Irul Irunthathu; Deva Aaviyanavar Jalaththin Mael Asaivaadi-Kondirunthaar.
3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
Devan Velicham Undakakadavathu Entraar, Velicham Undaaittu.
4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
Velicham Nallathu Entru Devan Kandaar; Velichaththaiyum Irulaiyum Devan Vev-Vearaaka Pirithaar.
5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
Devan Velichathukku Pagal Entru Pearrittar, Irulukku Irauv Entru Pearrittar; Saayankaalamum Vidiyar-Kaalamumaagi Muthalaam Naal Aaayittu.
6 பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
Pinbu Devan Jalaththin Maththiyil Aagaaya Virivu Undakakadavathu Entrum, Athu Jalaththinintru Jalaththai PirikkaKadavathu Entrum Sonnaar.
7 தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
Devan Aagaaya Virivai Undu Panni, Aagaya Viriuvkku Keelae Irukkira Jalaththirkkum Aagaya Virivukku Maelae Irukkira Jalaththirkkum Piriuv Undakkinaar; Athu Appadiyae Aayittu.
8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
Devan Aagaaya Virivukku Vaanam Entru Pearrittar; Saayangaalamum Vidiyar-Kaalamumaagi Erandaam Naal Aayittu.
9 பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Pinbu Devan Vaanaththin Keelae Irukkira Jalam Ooridaththil Saeravum, VettaanthTharai Kaanappadavum Kadavathu Entraar; Athu Appadiyae Aayittu.
10 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Devan VettanthTaraikku Bhoomi Entrum, Saerntha Jalaththirkku Samuthiram Entru Pearrittar; Devan Athu Nallathu Entru Kandaar.
11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Appozhuthu Devan: Bhoomiyaanathu Pullaiyum, Vithaiyai Pirappikkum Poondukalaiyum, Bhoomiyin Mael Thangalil Thangal Vithaiyudaya Kanikalai Thangal Thangal Jaathiyin Padiyae Kodukkum Kani VirutchanGalaiyum MuzhaipPikka Kadavathu Entraar; Athu Appadiyae Aayittu.
12 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Bhoomiyaanathu Pullaiyum, Thangal Jaathiyin Padiyae Vithaiyai Pirappikkum Poondukalaiyum Thangal Thangal Jaathiyin Padiyae Thangalil Thangal VithaiyaiVudaya Kanikalai Kodukkum VirutchanGalaiyum Muzhaipiththathu; Devan Athu Nallathu Entru Kandaar.
13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
Saayangaalamum Vidiyar-Kaalamumaagi Moontraam Naal Aayittu.
14 பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
Pinbu Devan Pakalukkum Eravukkum Vithiyaasam UndakathThakka Vaanam Engira Aagaaya Virivilae Sudarkal Undakakadavathu, Avaikal Adaiyaalangaluk-Kaakavum Kaalankalaiyum Naatkalaiyum Varushankalaiyum Kurikirathark-Kaakavum IrukkaKadavathu Entraar.
15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Avaikal Bhoomiyin Mael Pirakasikkum Padikku Vaanam Engira Aagaaya Virivilae Sudarkalai Irukka Kadavathu Entraar; Athu Appadiyae Aayittu.
16 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
Devan Pagalai Aaazha Periya Sudarum Eravai Aaazha Siriya Sudarum Aagiya Erndu MahathThaana Sudarkalaiyum Natchathirangalaiyum Undakkinaar.
17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
Avaikal Bhoomiyin Mael Pirakasikkavum,
18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Pagalaiyum Eravaiyum Aaazhavum, Velichaththukkum Irulukkum Vithiyaasam Undakkavum, Devan Avaigalai Vaanam Engira Aagaaya Virivilae Vaithaar; Devan Athu Nallathu Entru Kandaar.
19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
Saayangaalamum Vidiyar-Kaalamumaagi Naalam Naal Aayittu.
20 பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
Pinbu Devan: Neenthum Jeeva-Janth-Thukkalaiyum, Bhoomiyin Mael Vaanam Engira Aagaaya Virivilae Parakkum Paravaikalaiyum, Jalamaanathu Thiralaai Janippikka-Kadavathu Entraar.
21 தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Devan, Maha Matchchangalaiyim Jalaththil Thangal Thangal Jaathiyin Padiyae Thiralaai JanippikkaPatta Sakalavitha Neer Vaazhum JanthThukkalaiyum Sirakulla Jaathi Jaathiyaana Sakalavitha- Patchikalaiyum Sirushstiththaar.
22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார்.
Devan Avaigalai Aaseervathithu, Neengal Palugi Paerugi, Samuthira Jalaththai Nirappungal Entrum, Paravaigal Bhoomiyil PaerukaKadavathu Entrum Sonnaar.
23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.
Saayangaalamum Vidiyar-Kaalamumaagi Ainthaam Naal Aayittu.
24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Pinbu Devan: Bhoomiyathau Jaathi Jaathiyaana Jeeva Janthukkalagiya Naattu Mirugankalaiyum, Oovrum Piraanikalaiyum,Kaattu Mirugankalaiyum Jaathi Jaathiyaaka PirappikKakadavathu Entraar; Athu Appadiyae Aayittu.
25 தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
Devan Bhoomiyilulla Jaathi Jaathiyaana Kaattu Mirugankalaiyum, Jaathi Jaathiyaana Naattu Mirugankalaiyum, Bhoomiyil Oorum Piraanikal Ellavattraiyum Undakkinaar; Devan Ahu Nallathu Entru Kandaar.
26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
Pinbu Devan: Namathu Sayalakavum Namathu Roobaththin Padiyeyum Manushanai Undakkuvomaaga; Avargal Samuthiraththin Matchangaliyum, Aagaayaththu Paravaikalaiyum, Miruga Jeevankalaiyum, Bhoomiyanaithaiyum, Bhoomiyin Mael Oorum Sakala Piraanikalaiyum AaalakKadavaarkal Entraar.
27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
Devan Thammudaya Saayalaka Manushanai Sirushstiththaar, Avanai Deva Saayalakavae Sirushstiththaar, Aanum Pennumaaga Avarkalai Sirushstiththaar.
28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
Pinbu Devan Avarkalai Nokki: Neengal Palugi Paerugi, Bhoomiyai Nirappi,Athai Keezhpaduththi, Samuthiraththin Matchangaliyum Aagaayaththu Paravaikalaiyum, Bhoomiyin Mael Nada Maadukira Sakala Jeeva Janthukkalaiyum AandukKolzhungal Entru Solli Avarkalai Aaseervathithaar.
29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
Pinnum Devan: Itho, Bhoomiyin Mael Engum Vithai Tharum Sakala Vitha Poondukalaiyum, Vithai Tharum Kanimarangalakiya Sakalavitha VirutchanGalaiyum Ungalukku Koduthean, Avaikal Ungalukku AagaraaMaai Irukka Kadavathu.
30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.
Bhoomiyilulla Sakala Miruga Jaavankalukkum, Aagaayaththilulla Sakala Paraivikalukkum, Bhoomiyin Mael Oorum Piraanikal EllaaVattirkkum Pasumaiyaana Sakala Poondukalaiyum AagaraaMaai Koduthean Entraar; Athu Appadiyae Aayittu.
31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.
Appozhuthu Devan Thaam Undakkina Ellavattraiyum Paarthaar, Athu Migavum Nantraai Irunthathu; Saayangaalamum Vidiyar-Kaalamumaagi Aaraam Naal Aayittu.