1. ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:
Yeazhaam Maatham Irupaththoraanth-Thetheiyilae Aagaai Ennum Theerkatharisiyin Moolamaai Kartharudaya Vaarthai Undaayittru;Avar:
2. நீ செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், ஜனத்தில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது, என்னவென்றால்:
Nee Seyal-Theiyealin Kumaaranakiya Searubabael Ennum Yudhavin Thalaivanodum,YoathSaahkin Kumaaranakiya Yosuha Ennum Pirathaana Aasaariyanodum,Janththil Meethiyanavarkalodum Solla Vendiyathu Ennaventraal:
3. இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா?
Intha Aalayathin Munthina Magimaiyai Kandavarkalil Ungalukullae Meenth-Irukkiravarkal yaar? Ippozhuthu Ithu Ungaluku Eppadi Kaankirathu? Atharkku Ithu Ungal Paarvaiyil Ontrumillathatgu Pol Kaankirathallava?
4. ஆனாலும் செருபாபேலே, திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Aanalum Searubabaelae, Thidankol Entru Karthar Sollukiraar;YoathSaahkin Kumaaranakiya Yosuha Ennum Pirathaana Aasaariyanae Nee Thidankol;Deasaththin Ella Janangalae,Neengal Thidan Kollungal,Vealaiyai Nadaththungal Entru Karthar Sollukiraar; Naan Ungaludanae Irukirean Entru Seanaiklain Karthar sollukiraar.
5. நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.
Neengal (Egypt)Yeahipth-thilirunthu purapadukira Pothu Naan Ungalodae Udanpadikkai Pannina Vaarththaiyin Padiyae, En Aaviyanavarum Ungal Naduvil Nilai Kondiruppaar;Payapada-Theyungal.
6. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.
Seanaiklain Karthar sollukiraar: Konjakaalaththukullae Innum Orutharam Naan Vaanaththaiyum Bhoomiyaiyum Samuththiraththaiyum Vettaantharaiyaiyum Aasayapannuvean.
7. சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Sagala Jaathikalaiyum Aasayapannuvean,Sagala Jaathikalaalum Virumbapattavar Varuvaar; Intha Aalayaththai Magimaiyinaal Nirayapannuvean Entru Seanaiklain Karthar sollukiraar.
8. வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Velliyum Ennudayathu,Ponnum Ennudayathu Entru Seanaiklain Karthar sollukiraar.
9. முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Munthina Aalayaththin Magimaiyai Paarkilum,Intha Pinthina Aalayathin Magimai Pearithaairukkum Entru Seanaiklain Karthar sollukiraar.Evvidathilae Samaathaanaththai Kattalai-Iduvean Entru Seanaiklain Karthar uraikiraar Entru sol Entraar.
10. தரியுவின் இரண்டாம் வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்:
Thariuvin Irandaam Varushan Onbathaam Maatham Iruppaththu-Naalanth(24)Theathiyilae Aagaai Ennum Theerkatharisiyin Moolamaai Kartharudaya Vaarthai Undaayittu;Avar:
11. ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Oruvan Than Vasthiraththin Thongalilae Parisuththa Maamsththai Kondu-Pogaiyil Than Vasthiraththin Thongal Appaththai-Yaakilum, Thiraatcha-Rasaththaiyaakilum, Ennaiyaiyaakilum,Mattrentha Pojna-Pathaarththaiyaakilum Thottaal Athu Parisuththamaagumo Entru Nee Aasariyaridaththil Vedha Niyayaththai Pattri-Kael Entru Seanaiklain Karthar sollukiraar.
12. அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.
Atharkku Aasaariyarkal Pirathituththaramaaga:Parisuththamagaathu Entraarkal.
13. பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.
Pinaththaal TheettuPattavan Aavaikalil Ethaiyaakilum Thottal,Athu Theettupadumo Entru Aagaai Pinnum Kaettan; Atharkku Aasaariyarkal Pirathiyuththaramaga: TheettuPadm Entraarkal.
14. அப்பொழுது ஆகாய் அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.
Appozhuthu Aagaai Appadiyae Intha Jangangalum Intha Jaathiyaarum En Samugaththil Irukiraarkal Entru Karthar Sollukiraar; Avarkaludaya Kaikalin Ellaa Kiriyaikalum Appadiyae Irukkirathu; Avarkal Angae KonduVanthu Padaikirathum Theettu-Pattirukirathu.
15. இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
Ippozhuthum Kartharudaya Aalayaththai Kattum Padi Oru kallin Mael Oru Kal Vaikapattathu Muthal Nadanthathu Ungal Manathilae Sinththithu Paarungal.
16. அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.
Antha Naatkal Muthal Oruvan Irubathu Marakaalaaka Kanda AmPaaraththinidaththil Vanthu pothu, Paththu Marakaal Maathiram Iruntahthu; Oruvan Aalaiyin Thottiyil Aimbathu(50)kudam Molla Aalai-Yinidathilae Vantha Pothu Irubathu Kudam Maathiram Irunthathu.
17. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனந்திரும்பாமல் போனீர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Karukkaaiyinaalum Visha-Paniyinaalum Kalmalaiyinaalum ungalai Ungal Kaikalin Vealaiyil-Ellaam Adiththean; Aanalum Neengal Ennindaththil Mananthirumbamal Pooneerkal Entru Karthar Sollukiraar.
18. இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
Ippozhuthum Itharkku Munthina Kaalaththil Nadanthathai Ungal Manathilae Sinthithu Paarungal; Onbathaam Maatham Iruppaththu-Naalanth(24)Theathiyakiya Innaal Muthal Kartharuday Aalayathin Asthipaaram Podapatta Annaal Varaikkum Saentra Kaalaththil Nadanthathai Ungal Manathilae Sinththithu Paarungal.
19. களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
Kalaanjiyaththil Innum Vithai-Thaaniyam Undo? Thiraatchai-Chediyum Aththi Maramum Maathalanj-Chediyum Oliva Maramum Kanikodukka villaiyae,Naan Intru Muthal Ungalai Aasirvathippean Entru Sollukiraar Entraan.
20. இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்:
Iruppaththu-Naalanth(24)Theathiyakiya Annaalilae Kartharudaya Vaarththai Irandaam Visai Aagaai Enbavanukku Undagi,Avar:
21. நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி,
Nee Yudhavin Thalaivanakiya Searubabaelodae Solla vendiyathu Ennaventraal, Naan Vaanaththaiyum Bhoomiyai Aasayappanni,
22. ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள்.
Raajyangalin Singasanaththai Kavilththu, Jaathikaludaya Raajyangalin Belaththai Azhiththu, Raththaiyum Athil YeariyirukkiraVarkalaiyum Kavilththu Poduvean; Kuthiraikalodae Avaikalin Mael yeariyiruppavarkalum Avaravar Thangal Thangal Sakotharanin Pattayathinalae Vizhuvaargal.
23. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுகிறார் என்றார்.
Seanaiklain Karthar sollukiraar: Seyal-Theiyealin Kumaaranakiya SearubabaelEnnum En Oozhiyakaaranae,Unnai Naan Annaalilae SaerththuKondu,Unnai Muththirai Moothiramaaga Vaippean Entru Karthar Sollukiraar; Naan Unnai TherinthuKondean Entru Seanaikalin Karthar Uraikiraar Entru Sollukiraar Entraar.