உம் கிருபை எனக்குப் போதுமே – Um Kiruba Enaku Pothume song lyrics
உம் கிருபை எனக்குப் போதுமே – Um Kiruba Enaku Pothume song lyrics
உம் கிருபை எனக்குப் போதுமே!!
என் வாழ்க்கை நன்றாய் மாறுமே!!
நான் மனம் மாறி வாழ ஒரு வழிய தாங்கப்பா,
பாவக் கறை நீங்கிப் போக ஆவியின் கனிகள் தாங்கப்பா..
1.பெத்தவங்க மறந்தாலும், மத்தவங்க வெறுத்தாலும்,
என்னை தாங்கி நடத்தும் உங்க கிருபை பெரியது
பணங்காசு இல்லாதொரு, ஏழையாக இருந்த போதும்
நீர் என்ன தூக்கி எடுத்த கிருபை பெரியது
உலகோரின் வசை சொற்கள், என்னை வந்து தாக்கும் போது
ஆறுதலாய் இருக்கும் உந்தன் கிருபை பெரியது
ஒருவரும் மன்னியாத பாவியாய் நான் இருந்த போதும்,
எனக்காய் சிலுவை சுமந்த கிருபை பெரியது
அதனால உங்க நாமம் நான் போற்றி பாடுவேன்
அதனால உங்க நாமம் நான் துதிச்சு பாடுவேன் – உம் கிருபை
2.திறனேதும் இல்லா வெறுங், களிமண்ணாம் என்னையுமே
உமக்காய் பயன்படுத்தும் கிருபை பெரியது
நொறுங்குண்ட இதயத்தோடு, திக்கற்று நான் திரிஞ்சேன்…
என்னை நீங்க கண்ட விதம் ரொம்பப் பெரியது..
உம்மை பற்றி நினைக்காம, உம் தியாகம் புரியாம
இருந்த என்ன ஏற்று கொண்ட um கிருபை பெரியது…
உலகத்தின் இச்சைகளில், சிக்கி நானும் தவிச்ச போது..
கரம் கொடுத்து காத்த உந்தன் கிருபை பெரியது..
அதனால உங்க நாமம் நான் போற்றி பாடுவேன்
அதனால உங்க நாமம் நான் துதிச்சு பாடுவேன் – உம் கிருபை