தேசத்தின் எல்லையெங்கும் – Deasaththin Ellai Engum
தேசத்தின் எல்லையெங்கும் நாசகர் தொல்லைதர
பாரத மண்ணில் அமைதி போனதே
பேதையர் நம்மில் சிலர் பேதங்கள் பேசப் போக
பாரம் போர்களம் போல் ஆனதே
கார்மேகக் கூட்டம் எல்லாம்
மண்ணின் நிறம் பார்த்தா மழையை கொடுக்கும்
பண்பாடும் குயிலின் இனமும்
காசு வாங்கியா அழகாய் கூவும்
மலர் கூட்டம் வேண்டிய மனிதர்
என்று பார்த்திட்டா மணத்தை வீசும்
மனிதன் மட்டும் தரம் பிரித்து ஏன்
விருப்பு வெறுப்பினை காட்டிட வேண்டும்
அன்பு தேவை அன்பு தேவை
அன்பு தெய்வத்தின் அனுபவம் தேவை
அன்பின் தெய்வம் இயேசு தெய்வம்
அனுக்கிரகம் இன்றே இந்தியத் தேவை
வந்தேமாதரம் சொல்லும்போது
தேசிய ஒற்றுமை ஓங்குமே
இயேசுவின் பாரதம் ஆகும்போது
அன்பும் அமைதியும் தங்குமே
பிழைப்புக்காக மக்கட்குள்ளே பிளவை
உண்டுபண்ணும் சிலரும்
பதவிக்காக பிறரின் நலனை
பலிகொடுக்கும் பாதகரும்
புகழுக்காக எதையும் செய்யும்
போலிக் கொள்கையோடு சிலரும்
உணரும் வரை இந்தியாவின்
ஒருமைப்பாடு கனவாய் இருக்கும்
மதங்கள் என்னும் பிரிவுகள் எல்லாம்
மனிதன் தந்த பெயர்கள் தானே
மனங்கள் அடையும் சுத்தம் ஒன்றே
இறைவன் வேண்டும் மாற்றம் இன்றே
உண்மையறியா பலரும் உண்டே
உணருவாயோ தேவ ஜனமே
இயேசு நாமம் அறிவிக்கவே
முன் செல்வாயோ இளைஞனே
Deasaththin Ellai Engum song lyrics in English
Deasaththin Ellai Engum Naasagar Thollai Thara
Bharatha Mannil Amaithi Ponatahe
Peathaiyar Nammil Silar Peathangal Peasa Poga
Paaram Poarkalam Poal Aanathae
Kaar Meagam Koottam Ellaam
Mannin Niram Paartha Malaiyai Kodukkum
Panpaadum Kuyilin Inamaum
Kaasu Vaangiya Alagaai Koovum
Malar Koottam Veandiya Mnaithar
Entru Paarththittaa Manaththai Veesum
Manithan Mattum Tharam Piriththu Yean
Viruppu Veruppinai Kaattida Vendum
Anbu Devai Anbu Devai
Anbu Devaththin Anubavam Devai
Anbin Deivam Yesu Deivam
Anukkiragam Intrae Indiya Devai
Vanthae Maatharam Sollumpothu
Deasiya Ottrumai Oongumae
Yesuvin Bharatham Aagum Pothu
Anbum Amaithiyum Thangumae
Pilaippukaaga Makkatkullae Pilavai
Undu Pannum Silarum
Pathavikkaaga Pirarin Nalanai
Pali Kodukkum Paathagarum
Pugalukkaga Ethaiyum Seiyum
Poali Kolgaiyodu Silarum
Unarum Varai Indiyavin
Orumaipaadu Kanavaai Irukkum
Mathangal Ennum Pirivugal Ellaam
Manithan Thantha Peayargal Thaanae
Manganal Adaiyum Suththam Ontrae
Iraivan Vendum Maattrum Intrae
Unmaiyariya Palarum Undae
Unaruvaayo Deva Janamae
Yesu Naamam Arivikkavae
Mun Selvayo Elainganae – Anbu Devai