விடியலே என் விடிவெள்ளியே – Vidiyalae En Vidiveliyae
விடியலே என் விடிவெள்ளியே
வாழ வைக்கும் என் தெய்வம் நீரே!
அன்பே அரணே ஆருயிரே
வாழ்த்தி பாட நாவில்லையே!
எல்லா துதியும்…
எல்லா கனமும்…
எல்லா புகழும்…
என் தேவன் ஒருவருக்கே(2)
2. தாயின் கருவில் உருவாகும் முன்னே பேர் சொல்லி அழைத்த என் தெய்வம் நீரே
படைப்புகள் எல்லாம் அதிசயமே
அவர் நினைத்தால் எல்லாம் நிச்சயமே. (2)
எல்லா துதியும்…
எல்லா கனமும்…
எல்லா புகழும்…
என் தேவன் ஒருவருக்கே
3. கடனே இல்லாம வாழ செய்தார்
கவலை இல்லாம பாட செய்தார்
கண்ணே மணியே கன்மலையே
காத்திடும் எந்தன் தெய்வம் நீரே – ஓ..ஓ..
கண்ணே மணியே கன்மலையே
காத்திடும் எந்தன் தெய்வம் நீரே.
எல்லா துதியும்…
எல்லா கனமும்…
எல்லா புகழும்…
என் தேவன் ஒருவருக்கே(2)
4. கானல் நீரும் களிப்பாகுமே -அவர்
ஆசீர்வதித்தால் செழிப்பாகுமே
பாட பாட பேரின்பமே – அவரை
தேட தேட பரிசுத்தமே – ஓ..ஓ..
பாட பாட பேரின்பமே – அவரை
தேட தேட பரிசுத்தமே.
எல்லா துதியும்…
எல்லா கனமும்…
எல்லா புகழும்…
என் தேவன் ஒருவருக்கே(2)
5. தினம் தினம் தாங்கிடும் என் தெய்வமே
திறப்பில் நிற்கனும் உமக்காகவே.
மீட்டு எடுத்த மகராசனே
காண வேணும் பரலோகமே – ஓ..ஓ..
மீட்டு எடுத்த மகராசனே
காண வேணும் பரலோகமே.
எல்லா துதியும்…
எல்லா கனமும்…
எல்லா புகழும்…
என் தேவன் ஒருவருக்கே.
அல்லே…லூயா அல்லேலூயா
அல்லே…லூயா அல்லேலூயா(2)