வானில் சேரும் சுத்தர் – Vaanil Searum Suththar

Deal Score0
Deal Score0

வானில் சேரும் சுத்தர் – Vaanil Searum Suththar

வானில் சேரும் சுத்தர் கூட்டம் நாங்களே நாங்களே
வெற்றிவாகை சூடும் சேனை
நாங்களே நாங்களே
நித்திய ஜீவனுக்காக குறித்த என்னற்றோர் நாங்களே நித்தம்
அல்லேலூயா பாடி துதித்திடும் பாக்கியவான்களே

1.தீயில் நடந்தோம் நோயில் கிடந்தோம் இயேசு தூக்கிவிட்டார்
பேயை ஜெயித்திட மாயை வெறுத்திட இயேசப்பா செய்துவிட்டார்-2
வெற்றி வாழ்க்கை நடத்துவோம்
சாட்சி வாழ்க்கை வாழுவோம்-2
தேவதயாபரன் தூய நல்லாவியில்
ஆளுகை செய்திடுவோம்
அவருடன் -2

2.ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ்ந்திட இயேசு வருகிறார்
ஆகாயம் அதிர எக்காளம் முழங்க
இறங்கி வருகிறார் -2
மருரூபமாகுவோம் மகிமையில் சேருவோம்-2
நித்திரை அடைந்த உத்தமர் உயிர்த்த உண்ணதம் சேருவோம்
மீட்பருடன் -2

Christian
      Tamil Christians songs book
      Logo