மனம் விரும்பும் பாதைகளில் – Manam Virumbum Paathaikalil

Deal Score0
Deal Score0

மனம் விரும்பும் பாதைகளில் – Manam Virumbum Paathaikalil

மனம் விரும்பும் பாதைகளில்
நடந்தால் ஒரு நாள் வருந்த நேரிடும்
தேவன் விரும்பும் பாதைகளில்
நடந்தால் ஆசீர்வாதம் வந்துவிடும்

திரும்புவோம் மனம் திரும்புவோம்
தேவனிடம் நாம் திரும்புவோம்

போதுமேன்கிற மனதுடன் கூடிய
தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்
ஆசைகளை நாம் அடக்கியே வாழ்ந்தால்
வாழ்வில் மகிழ்ச்சி பெருகிவிடும்

பணப்பிரியன் பணத்தினால் திருப்தி
ஒருபோதும் வாழ்வில் அடைவது இல்லை
ஐஸ்வரியம் வாழ்வில் மிகுதியாய் சேர்ந்தால்
நிம்மதியை நாம் இழந்திடுவோம்

உலக ஆசை எல்லாம் மையை
ஒருநாள் அவைகள் அழிந்தே போய்விடும்
பரத்தை நோக்கி ஆசையாய் வாழ்ந்தால்
பரமனிடம் நாம் சேர்ந்திடுவோம்

Jeba
      Tamil Christians songs book
      Logo