சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா – Chinna Chinna Palaga Yesu Nayaga
சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா
உன் மான் விழிகள் மூடித் தூங்கு இயேசு பாலகா
சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா
உன் மான் விழிகள் மூடித் தூங்கு இயேசு பாலகா
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
வாடை தாங்க இங்கே கந்தைகள் உண்டு
மேடையாக இங்கே புல்லணை உண்டு
வாடை தாங்க இங்கே கந்தைகள் உண்டு
மேடையாக இங்கே புல்லணை உண்டு
தங்க தொட்டிலாக அன்னை மடி உண்டு
தங்க தொட்டிலாக அன்னை மடி உண்டு
தங்கமே நீ கண்ணுறங்கு ஆரிராராரோ
தங்கமே நீ கண்ணுறங்கு ஆரிராராரோ
சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா
உன் மான் விழிகள் மூடித் தூங்கு இயேசு பாலகா
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆவினங்கள் இங்கே கீதம் பாடிட
துள்ளியோடும் ஆடு தாளம் மீட்டிட
ஆவினங்கள் இங்கே கீதம் பாடிட
துள்ளியோடும் ஆடு தாளம் மீட்டிட
வான் பறவை பாட கான மயில் ஆட
வான் பறவை பாட கான மயில் ஆட
வானவனே கண்ணுறங்கு ஆரிராராரோ
வானவனே கண்ணுறங்கு ஆரிராராரோ
சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா
உன் மான் விழிகள் மூடித் தூங்கு இயேசு பாலகா
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
பாவம் போக்க வந்த பாச தீபமே
பார் தலத்தை மீட்க வந்த நேசமே
பாவம் போக்க வந்த பாச தீபமே
பார் தலத்தை மீட்க வந்த நேசமே
கந்தை கோலமாக மண்ணில் வந்த ராஜா
கந்தை கோலமாக மண்ணில் வந்த ராஜா
கண்மணியே கண்ணுறங்கு ஆரிராராரோ
கண்மணியே கண்ணுறங்கு ஆரிராராரோ
சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா
உன் மான் விழிகள் மூடித் தூங்கு இயேசு பாலகா
சின்ன சின்ன பாலகா இயேசு நாயகா
உன் மான் விழிகள் மூடித் தூங்கு இயேசு பாலகா
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ