எல்லா ஸ்தோத்திரமும் கனமும் – ELLA STHOTHIRAM Kanamum

Deal Score0
Deal Score0

எல்லா ஸ்தோத்திரமும் கனமும் – ELLA STHOTHIRAM Kanamum

எல்லா ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் என்றென்றும் உமதாகட்டும்…
எல்லா ராஜியமும் துதியும் இரட்சண்யமும் மகிமையும் கிறுஸ்துவுக்கே உரியதாகட்டும் -2

நீரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ஆ.. ஆமென்…
நீரே இருந்தவரும் இருப்பவரும் வரப்போகிறவர் அல்லேலுயா…

சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்கவே இருக்கும்…
கிறுஸ்துவானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக -2
மகிமை உண்டாவதாக

நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினால், நம்முடைய பாவங்களை கழுவி நிறுத்தினாரே… ராஜாக்களும் ஆசாரியரும் தமக்காய் மாற்றினாரே…
இயேசுவின் அன்பை எங்கு நான் காண்பேன் ஆட்டுக்குட்டியானவரே!!!…
மரணத்தை ஜெயித்தவரே!!!

என் பெருமூச்சை கேட்பவரே…
எளியோரின் நம்பிக்கையே… விழுந்தோரை தாங்குகிறீர்…
தலை குனிந்தோரை உயர்த்துகிறீர்… அற்பமான என் வாழ்வினையே அற்புதமாய் மாற்றினீரே…
உம் வசனம்
என் வாசஸ்தலம்
தம் கிருபையால் பிழைத்துள்ளேன்…
உம்மை காண வாஞ்சிக்கிறேன்…

உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவரே… ஒருபோதும் உன்னை கை விடாரே…
பாதியில் உதறி தள்ளிடாரே…
மீதியை அவரே முடித்திடுவார்…

எல்லாம் இயேசுவே!!! இயேசுவே!!! இயேசுவே

Jeba
      Tamil Christians songs book
      Logo