இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam

Deal Score+1
Deal Score+1

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?
பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ

பூவெல்லாம் சிரிக்குதே
குளிர் காத்தும் அடிக்குதே
மனசெல்லாம் இனிக்குதே
இது எதனால!

உன்ன என்ன படைச்ச ஆண்டவரே
வந்து பொறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே

ஒண்ணுதுக்கும் ஒதவாத
மாட்டு தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததால
உலகம் முழுசா தெரிஞ்சேனே

தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்ட
பூவெல்லாம் சிரிக்குதே
குளிர் காத்தும் அடிக்குதே
மனசெல்லாம் இனிக்குதே
என் ராஜா பிறந்தநாள்

எங்கோ ஒரு மூலையில
பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவலே ஆளும் ராஜா
என்னில் பிறக்க குறிக்க பட்டேன்

சின்னவன்னு ஒதுக்கப் பட்ட என்ன அவர்

நெனைச்சாரு
பூமிக் கெல்லாம் வெளிச்சமா இருக்க
முன்குறிச்சாரு
பூவெல்லாம் சிரிக்குதே
குளிர் காத்தும் அடிக்குதே
மனசெல்லாம் இனிக்குதே
என் ராஜா பிறந்தநாள்

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo