மனதோடு பேசவா இயேசுவே – Manathodu Peasava Yesuvae

Deal Score+1
Deal Score+1

மனதோடு பேசவா இயேசுவே – Manathodu Peasava Yesuvae

மனதோடு பேசவா இயேசுவே
மௌனம் உன் மொழி அல்லவா
உன்னோடு பேசனும்
உன் தோளில் சாயனும்
உன்னோடு வாழ வேண்டுமே

என் வானில் நிலவாய் என் வண்ணக் கனவாய்
உன் வார்த்தை ஒளி வீசுமே
என் தனிமை உறவாய் என் அருமை நிறைவாய்
உன் வார்த்தை வளம் சேர்க்குமே
துயரில் துணையாய் உயர்வில் மகிழ்வாய்
உயிரில் கலந்தாய் உணர்வில் கரைந்தாய்
உன் வார்த்தை உறவாகுமே
உன் சொல் என் வாழ்வாகுமே

ஆழ்கடல் கடந்தால் தீயினில் நடந்தால்
உன் வார்த்தை வழி காட்டுமே
பால்வெளி ஓடையும் பாலையில் பாதையும்
உன் வார்த்தை உருவாக்குமே
வானின் அமுதாய் அருளின் விதையாய்
தியாக பலியாய் நீயே கதியாய்
என் வாழ்வு உனைச் சேருமே
உன் சொல் என் வாழ்வாகுமே

Jeba
      Tamil Christians songs book
      Logo